Categories
மாநில செய்திகள்

நடிகர் திலகம் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஸ்டாலின்…. தடுத்து நிறுத்தப்பட்ட நீதிபதி…. டென்ஷனாகி போட்ட உத்தரவு….!!

சென்னை அடையார் சாலையில் உள்ள சிவாஜி மண்டபத்தில் நேற்று முன்தினம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள்,எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டதால் சாலைகளின் இரு பக்கமும் போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் அந்த வழியாக சென்ற உயர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் என்பவரின் வாகனத்தையும் காவல்துறையினர் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் நீதிபதி 25 நிமிடங்கள் தாமதமாக நீதிமன்றத்துக்குச் சென்றதால் பணி பாதிக்கப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து காணொலி காட்சி மூலம் உள்துறை செயலாளர் பிரபாகரன் ஆஜரானார். அவரிடம் எதற்காக 25 நிமிடங்கள் தடுத்து நிறுத்தினார்கள்? பொது ஊழியரான என்னை பணி செய்ய விடாமல் தடுத்தது நீதிமன்ற அவமதிப்பகாதா? என்று கேள்விகளை எழுப்பினார். அதற்கு அவர் வருத்தம் தெரிவிப்பதாக கூறி, இனி எதிர்காலத்தில் இது போன்ற செயல்கள் நடைபெறாது என்று உறுதியளித்தார். மேலும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |