Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் திலீப்பிடம் இருந்த 11,000 வீடியோக்கள்….. 22,000 ஆடியோக்கள்….. அதிர்ச்சியில் போலீஸ்…!!!!!

நடிகர் திலீப்பிடமிருந்து 11,000 வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடித்து வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்த பிரபல நடிகை மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட நடிகையை  அந்த கும்பல் காருக்குள் வைத்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது. இது தொடர்பாக வழக்கில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நடிகர் திலீப் மற்றும் நடிகையை கடத்தலுக்கு தலைவனாக செயல்பட்ட பல்சர் சோனி போன்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதன் பின் ஜாமினில் வெளியே வந்த தீலிப்  விசாரணை அதிகாரியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக அவரது சகோதரர் மற்றும் மைத்துனர் போன்றோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நடிகை காவ்யா மாதவனுக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தீலிப் மற்றும் அவரது கூட்டாளிகளின் செல்போனில் இருந்து 11, 161 வீடியோக்கள், 22000 ஆடியோக்கள், 2 லட்சம் போட்டோக்களை மீட்டுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.

தற்போது இந்த வீடியோக்கள்  அழிக்கப்பட்ட நிலையில் போலீசார் அதனை தற்போது மீட்டுள்ளனர். இந்த வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை  ஆய்வு செய்யும் பணி விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. எனவே இந்த வழக்கில் தடவியல் துறையினர் தயார் செய்து வரும் அறிக்கை இரண்டு லட்சம் பக்கங்களை கடந்துள்ள நிலையில் இது இன்னும் அதிகரிக்கலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |