Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் நானிக்கு பிறகு… “இவர் தான் எனக்கு பிடிக்கும்”… நடிகை நிவேதா தாமஸ் ஓபன் டாக்!!

இளம் நடிகையான நிவேதா தாமஸ் தனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் யார் என்று தெரிவித்துள்ளார்..

தமிழ், தெலுங்கு பட உலகில் வளரும் இளம் நடிகையான நிவேதா தாமஸ் நடிகர் நானியை தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். நானிக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் என்றால் மிகவும் பிடிக்கும் என குறிப்பிட்ட அவர், அவருடைய நடனத்துக்கு தான் தீவிர ரசிகை எனவும், எனர்ஜி க்கு இன்னொரு பெயர் சொல்ல வேண்டுமென்றால், ஜூனியர் என்டிஆர் தான் எனவும் கூறினார். செட்டில் அவரும் உற்சாகமாக இருந்து மற்றவர்களையும் உற்சாகப்படுத்துவார்.

அவருக்கு காய்ச்சல் இருந்தாலும், தூக்கமில்லாமல் இருந்தாலும், வேறு ஏதாவது பிரச்சனை இருந்தாலும், அதையெல்லாம் வெளியே காட்டிக் கொள்ளவே மாட்டார். இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும், கஷ்டம் ஏற்படாமல் தான் ஒதுக்கிய நாட்களில் படப்பிடிப்புக்கு ஆஜராகி விடுவார். தொழில்ரீதியாக அவரிடமிருந்து தான் எத்தனையோ விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் நிவேதா தாமஸ் தெரிவித்தார்.

Categories

Tech |