நடிகர் நானி நடிப்பில் உருவாகி வரும் ஷியாம் சிங்கா ராய் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் தெலுங்கில் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். இவர் நடிப்பில் உருவான வி மற்றும் டக் ஜெகதீஷ் போன்ற படங்கள் கொரோனா காரணமாக நேரடியாக ஓடிடியில் வெளியானது. தற்போது நானி இயக்குனர் ராகுல் சங்கிருத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஷியாம் சிங்கா ராய் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார்.
TEASER
November 18th #ShyamSinghaRoy 🔥 pic.twitter.com/RW4Mkr3P3A— Hi Nani (@NameisNani) November 11, 2021
மேலும் மடோனா செபாஸ்டின், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு மிக்கி.ஜே.மேயர் இசையமைத்துள்ளார். வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ஷியாம் சிங்கா ராய் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற நவம்பர் 18-ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியாகவுள்ளது.