நடிகர் பசுபதி அடுத்ததாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் மாயன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பசுபதி. இதை தொடர்ந்து இவர் விருமாண்டி, தூள், திருப்பாச்சி, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் பசுபதி ரங்கன் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் நடிகர் பசுபதி அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ராம் சங்கையா இயக்கும் இந்த படத்தில் அம்மு அபிராமி, ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி.கே.எஸ் இசையமைக்கிறார் . நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் பாடல் பதிவும் ஆரம்பமாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.