தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பரத் தற்போது தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆர்.பி.பாலா இயக்கி வருகிறார். இந்த படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருவதாகவும், கலைபுலி எஸ்.தாணு படத்தை தயாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வாணிபோஜன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் டேனியல், விவேக் பிரசன்னா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக முத்தையா பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் பரத் நடிக்கும் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இந்த படத்தின் தலைப்பை இன்று மாலை 5.50 மணிக்கு வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.