Categories
சினிமா

நடிகர் பரத்தின் 50-வது திரைப்பட போஸ்டர் வெளியீடு…. குஷியில் ரசிகர்கள்…..!!!!!

பாய்ஸ், செல்லமே, காதல், வெயில், ஸ்பைடர் உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் நடிகர் பரத் பதித்தார். இவரின் யதார்த்தமான நடிப்பின் வாயிலாக அனைவரையும் கவர்ந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய நடுவண் படம் நல்ல வரவேற்பை பெற்று 12-வது தாதா சாகேப் பால்கே திரைப்படவிழா 2022-ல் தேர்வானது. பரத்தின் 50வது படத்தின் பூஜையும் அண்மையில் தொடங்கியது. இதனை தயாரிப்பாளர் எஸ்.தாணு துவங்கி வைத்துள்ளார். திரில்லர் கதை அம்சம் கொண்டு உருவாகும் இந்த படத்தில் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார்.
அவர்களுடன் விவேக் பிரசன்னா, பிக்பாஸ் புகழ் டேனி போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தபடத்தை ஆர்.பி.பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதற்கிடையில் லுசிபர், மரைக்காயர், குருப் உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய ஆர்.பி.பாலா இந்த படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் ஒளிப் பதிவை பி.ஜி.முத்தையா மேற்கொள்கிறார்.
இந்த நிலையில் இத்திரைபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்போது வெளியாகியுள்ளது. பரத்துக்கு 50வது படம் என்பதால் இதை கொண்டாடும் வகையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 50 திரைப்பிரபலங்கள் தங்களது சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர். மோகன் லால், ஆர்யா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வெளியிட்ட இந்த படத்திற்கு “லவ்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் போஸ்டர் சமூகவலைத்தளத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாகி இருக்கிறது.

Categories

Tech |