நடிகர் பஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள மாலிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் பஹத் பாசில். இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தார். மேலும் இவர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகர் பஹத் பாசில் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாலிக் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
fafa is our maseeha ✊
Meet #MalikOnPrime July 15#FahadhFaasil #NimishaSajayan #JojuGeorge #VinayForrt #DileeshPothan #DivyaPrabha #SanuJohnVarghese #SanalAman #DineshPrabhakar #ParvathyKrishna @IamAntoJoseph @AJFilmCompany @maheshNrayan #SushinSyam pic.twitter.com/4NcljRiJa3— prime video IN (@PrimeVideoIN) July 1, 2021
மேலும் ஜோசப், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை அண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் மாலிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படம் வருகிற ஜூலை 15-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது.