Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பாபி சிம்ஹாவின் ‘வசந்த முல்லை’… டீஸர் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகியுள்ள வசந்தமுல்லை படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகர் பாபி சிம்ஹா பீட்சா, சூது கவ்வும், நேரம், கருப்பன், ஜிகர்தண்டா, இறைவி உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பாம்புச்சட்டை, உறுமீன்,  திருட்டுப்பயலே 2 போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தியுள்ளார் . தற்போது பாபி சிம்ஹா இயக்குனர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் வசந்தமுல்லை படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் காஷ்மீரா பர்தேஷி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் வசந்த கோகிலா என்ற டைட்டிலில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார் . இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது . அதன்படி வருகிற ஜூன் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு வசந்த முல்லை படத்தின் டீஸர் வெளியாக இருக்கிறது .

Categories

Tech |