நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன். இந்த படம் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும் . தற்போது அந்தகன் படத்தை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, மனோபாலா, கே எஸ் ரவிகுமார், செம்மலர், பூவையார், லீலா சாம்சன், சமுத்திரக்கனி, வனிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
#Karthik #Prashanth59 @actorprashanth #Andhagan https://t.co/o32VPoy4cB
— Sunil (@Sunil59118963) April 22, 2021
இதுவரை இந்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் நவரச நாயகன் கார்த்திக் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படக்குழுவுடன் நடிகர் கார்த்திக் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது . சமீபத்தில் நடிகர் கார்த்திக் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் .