Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரதாப் போத்தனின் கடைசி ஆசை…. இறுதி சடங்கில் நிறைவேறியது….!!!

மறைந்த நடிகரின் இறுதிச் சடங்கு அவருடைய விருப்பம் போல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், குணச்சித்திர நடிகர் என பன்முக திறமை கொண்ட பிரதாப் போத்தன் (70) தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 1978-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆரவம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். கடந்த 1985-ம் ஆண்டு மீண்டும் ஒரு காதல் கதை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இந்த படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனர் என்ற இந்திரா காந்தி விருதை பெற்றார். இந்நிலையில் பிரதாப் போத்தன் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் உயிரிழந்தார்.

இவருடைய மறைவிற்கு இயக்குனர் மணிரத்தினம், நடிகர் சத்யராஜ், கமல்ஹாசன், பிரபு, பாக்யராஜ், கனிகா, பூர்ணிமா பாக்யராஜ் என திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி உள்ளனர். இதனையடுத்து பிரதாப் போத்தனின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் முடிந்த பிறகு கீழ்ப்பாக்கத்தில் உள்ள வேலங்காடு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மேலும் கிறிஸ்தவ முறைப்படி உடலை புதைப்பது வழக்கமாக இருந்தாலும், பிரதாப் போத்தன் இறப்பதற்கு முன்பாக தன்னுடைய உறவினர்களிடம் உடலை தகனம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதன் காரணமாக பிரதாப் போத்தனின் உடல் புதைப்பதற்கு பதிலாக மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Categories

Tech |