நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் ராதேஷ்யாம் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ். இந்தப் படத்தின் இரண்டு பாகங்களுமே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிப்பில் சாஹோ திரைப்படம் வெளியானது . தற்போது பிரபாஸ் ராதேஷ்யாம், ஆதிபுருஷ், சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ராதா கிருஷ்ணகுமார் இயக்கும் இந்த படத்தை யூவி கிரேஷன்ஸூடன் இணைந்து கோபிகிருஷ்ணா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
Many Festivals. One Love! 💞
Here's wishing everyone a very #HappyUgadi, Gudi Padwa, Baisakhi, Vishu, Puthandu, Jur Sithal, Cheti Chand, Bohag Bihu, Navreh & Poila Boshak! #30JulWithRSStarring #Prabhas & @hegdepooja pic.twitter.com/FAsdd9Phy4
— Nikil Murukan (@onlynikil) April 13, 2021
மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு ராதேஷ்யாம் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.