நடிகர் பிரபுதேவா, இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரின் வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பிரபலமாக அறியப் படுகின்றார். இவரது முதலாவது நடனம் வெற்றிவிழாத் திரைப்படத்திற்கானதாகும். இவர் இன்றுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார். மின்சார கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இவர் பிரபல நடிகையை காதலித்து திருமணம் வரை சென்ற நிலையில், அந்த திருமணம் பாதியில் நின்றது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு சமயத்தில் 2020ம் ஆண்டு, பீகாரை சேர்ந்த மருத்துவர் ஹிமானி சிங் என்பவருடன் பிரபுதேவாவிற்கு காதல் ஏற்பட்டதாகவும், ரகசியமாக திருமணம் செய்துகொண்டு தற்போது இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும், பிரபலங்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் ஜெயந்தி கண்ணப்பன் என்பவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.