வருமான வரித்துறையினர் கேரளாவில் நடிகர் பிரித்திவிராஜ், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன், ஆண்டோ ஜோசப் வீடுகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். கேரளம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வருமான வரி துறையினர் காலை 8:00 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த சோதனையை நடத்தினார்கள்.
இதில் பல்வேறு ஆவணங்களை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வருமான வரி சோதனை குறித்து உள்ளூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் சோதனை தொடர்பாக ஊடகங்களுக்கு பதில் அளிக்க அதிகாரிகள் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.