குருதி படத்தின் திரில்லான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும், கோல்ட் கேஸ் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பிரம்மம், தீர்ப்பு, ஜன கன மன, குருதி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திரில்லர் கதையம்சம் கொண்ட குருதி படத்தை மனு வாரியர் இயக்கியுள்ளார்.
https://twitter.com/PrithvirajProd/status/1423888364676128770
மேலும் பிரித்விராஜ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். சமீபத்தில் குருதி படத்தின் பரபரப்பான டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் குருதி படத்தின் திரில்லான புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் இந்த படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாக இருக்கிறது.