Categories
தேசிய செய்திகள்

நடிகர் பிரித்வி உட்பட படப்பிடிப்புக் குழுவை சேர்ந்த 58 பேர் ஜோர்டானில் சிக்கினர்… கேரள திரைப்பட சேம்பர்

ஜோர்டானின் வாடி ரமில் மலையாள திரைப்பட படப்பிடிப்புக் குழுவை சேர்ந்த 58 உறுப்பினர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்கள் ஜோர்டானில் இருப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கும், கேரள வெளியுறவுத்துறை அமைச்சர் வி முரளீதரன் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கேரள திரைப்பட சேம்பர் ஆஃப் காமர்ஸ் தெரிவித்துள்ளது. மொழி உள்ளிட்ட தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமான நடிகர் பிரித்விராஜும் அவரது படப்பிடிப்பு குழுவினரும் ஜோர்டானில் சிக்கித் தவித்து வருகின்றனர். பிரபல மலையாள இயக்குனர் பிளஸி, நடிகர் ப்ரித்விராஜை வைத்து ஆடு ஜீவிதம் என்ற படத்தை எடுத்து வருகிறார். அரேபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஆடு மேய்க்கும் பணிக்கு தள்ளப்படும் இளைஞனின் கதை தான் இது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் கொரோன தோற்று காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லவோ, வரவோ விமான சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இந்தியாவிலும் இன்று 8வது நாளாக 144 தடை அமலில் உள்ளது. இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு உத்தரவு வருவதற்கு முன்னர் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் ஜோர்டான் சென்றுள்ளனர். தற்போது, விமான சேவைகள் ரத்தனத்தால் இப்போது நாடு திரும்பமுடியாமல் அங்கு தவித்து வருகின்றனர். தங்களை எப்படியாவது நாடு திரும்ப உதவுமாறு அவர்கள் கேரள பிலிம் சாம்பாரை தொடர்பு கொண்டுள்ள நிலையில், இந்த விவகாரம் கேரளா முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் மீட்கப்படுவார்களா என்பது குறித்து விரைவில் தகவல் வெளிவரும்.

Categories

Tech |