நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவரது இறுதி சடங்கு பெங்களூருவில் நடைபெற்றது. நடிகர் புனித்தின் மரணம் அவருடைய ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புனித் ராஜ்குமார் மறைவால் மனம் உடைந்த மேலும் ஒரு ரசிகர் தற்கொலை செய்துகொண்டார்.
கர்நாடகாவின் துமுகூரு மாவட்டம் ஹெப்பூரை சேர்ந்த பரத் என்பவர் வீட்டில் யாரும் இல்லாதபோது கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும் ஹிரேஹள்ளியை சேர்ந்த மற்றொரு ரசிகரான அப்பு சீனிவாஸ் என்பவர் புனித் இறந்த அதிர்ச்சியில் மாரடைப்பால் மரணமடைந்தார்.