Categories
சினிமா

நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது…. விழாவில் பங்கேற்கபோகும் நடிகர் ஜூனியர் என்டிஆர்…. வெளியான தகவல்….!!!

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வந்த நடிகர் புனித் ராஜ்குமார் சென்ற வருடம் திடீரென்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இது கன்னட திரை உலகம் மட்டுமின்றி இந்தியத் திரையுலகையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் மறைந்து ஒரு ஆண்டு ஆகிவிட்ட நிலையில், அவருக்கு கர்நாடகாவின் மிகவும் உயர்ந்த விருதான கர்நாடக ரத்னா என்ற விருது வழங்கும் விழா வருகிற நவம்பர் 1ஆம் தேதி பெங்களூருவிலுள்ள விதான் சவுதாவில் நடக்க உள்ளது.

கர்நாடகாவில் இந்த ஆண்டு நடைபெறும் மிகப் பிரம்மாண்டமான விழாவாக இது இருக்கவேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இவ்விழாவில் பங்கேற்பதற்கு தமிழ் சினிமாவிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் இரண்டு பேரும் இவ்விழாவில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துவிட்டார்கள் எனவும் கர்நாடக நிதியமைச்சர் அசோகா தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, “முதலில் இவ்விழாவிற்கு வர ரஜினிகாந்த் தயங்கினாலும் பிறகு சம்மதம் தெரிவித்து விட்டார். அவர் கர்நாடகத்தில் பிறந்துவளர்ந்து அங்கேயே அரசு பேருந்திலும் பணிபுரிந்தவர் ஆவார். அத்துடன் நடிகர் ராஜ்குமார் குடும்பத்தின் மீது மிகப் பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர். அதேபோன்று நடிகர் ஜூனியர் என்டிஆரின் அம்மா கர்நாடகாவை சேர்ந்தவர் ஆவார். ஆகவே இவர்கள் இருவருமே இந்த விழாவில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |