நடிகர் மகேஷ்பாபு திரைப்படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகின்றது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. இவர் வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த இவர் தற்பொழுது வில்லனாகவும் மிரட்டி வருகின்றார். இந்த நிலையில் தற்போது நடிகர் மகேஷ்பாபு நடிக்கும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
த்ரிவிக்ரம் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கின்றது. இந்த படத்தில் மகேஷ்பாபுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்கும் வில்லன் வேண்டும் என படக்குழு விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகின்றது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.