Categories
சினிமா

நடிகர் மணிவண்ணன் மகன் எப்படி இருக்கிறார் தெரியுமா? குடும்ப புகைப்படம் இதோ..!!

நடிகர் மணிவண்ணனின் மகன் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்தவர் மணிவண்ணன். இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியவர் 1978-ம் வருடம் பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தார். அதன்பிறகு கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து நூறாவது நாள், ஜோதி, முதல் வசந்தம், இங்கேயும் ஒரு கங்கை, சின்னத்தம்பி பெரியதம்பி, ஜல்லிக்கட்டு என பல படங்களை மணிவண்ணன் இயக்கியிருந்தார். அதன்பிறகு 2013 ஆம் வருடம் ஜூன் மாதம் 15ஆம் தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மணிவண்ணன் உயிரிழந்தார்.

தமிழ் திரையுலகமே இவரது இழப்பிற்கு சோகத்தில் மூழ்கியது. மணிவண்ணனுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன் அபி என்ற பெண்ணை கடந்த 2013ஆம் வருடம் திருமணம் செய்தார். தற்போது ரகுவண்ணன் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதோடு ரகுவண்ணனுக்கு முதல் குழந்தையான ஆத்விக் 2016 ஆம் ஆண்டு பிறந்தது. அதன் பிறகு இரண்டாவது குழந்தையான ஆதித்யன் 2018 ஆம் ஆண்டு பிறந்துள்ளது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |