Categories
விளையாட்டு

நடிகர் மாதவன் மகன்….. நீச்சல் போட்டியில் தேசிய சாதனை….. குவியும் பாராட்டுக்கள்….!!!!

புவனேஸ்வரில் நடைபெற்ற நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தேசிய சாதனை படைத்துள்ளார். நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் வீரர் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரில் நடைபெறும் 48வது ஜூனியர் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் கலந்து கொண்டார். இந்த போட்டியில் அவர் தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கமும் வென்றுள்ளார்.

கலிங்கா அரங்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 1500 மீ ப்ரீஸ்டைல் போட்டியில் 16:01.73 விநாடிகளில் தூரத்தை கடந்தார். இதற்கு முன்பு இதே போன்ற 1500 மீ ப்ரீஸ்டைல் போட்டியில் 16:06.43 என இருந்த தேசிய சாதனையை தற்போது அவர் முறியடித்துள்ளார். அவர் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்கவுள்ளார்.

Categories

Tech |