நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே.ஜி.எப்-2 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
கன்னட திரையுலகில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இதில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய்தத், பிரகாஷ்ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
We are glad to announce that we have acquired the audio rights of India’s Much Awaited Magnum Opus Film #KGFChapter2 🔥
Audio on @LahariMusic & @TSeries 🎶Music by @BasrurRavi 🎹@TheNameIsYash @prashanth_neel @hombalefilms @VKiragandur #KGF2AudioOnLahariTseries pic.twitter.com/0PpZGQgUPK
— LahaRRRi Music (@LahariMusic) July 1, 2021
மேலும் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கே.ஜி.எப்-2 படத்தின் பாடல் உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.