நடிகர் யாஷை பாராட்டி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இன்ஸ்டாவில் பதிவொன்றை போட்டுள்ளார்.
நடிகர் யாஷ் நடிப்பில் கேஜிஎஃப் 2 திரைப்படமானது தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் ஆகிய பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உலக முழுவதும் ரிலீஸானது.
இந்தப் படம் ரிலீஸாகி தற்போது நல்ல வரவேற்பு பெற்று வருகின்ற நிலையில் இதுவரை உலக அளவில் 275 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. இத்திரைப்படத்தின் வெற்றியால் மூன்றாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் யாஷை புகழ்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கடந்த சில தசாப்தங்களாக காணாமல் போயிருந்த கோபக்கார இளைஞனை கண்முன் நிறுத்துகிறார் யாஷ். எழுபதுகளில் இருந்து அமிதாப் பச்சன் விட்டுச்சென்ற அந்த வெற்றிடத்தை நடிகர் யாஷ் அழகான அற்புதத்தை நிரப்பி இருக்கின்றார் என பகிர்ந்துள்ளார்.