Categories
தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ்?

ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்  நடிகர் ரஜினிகாந்தை எப்போது டிஸ்சார்ஜ் செய்வது என்பது குறித்து இன்று மதியம் முடிவு செய்யப்படும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்தார். படக்குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று  உறுதியான நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனிடையே அவருக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் அங்குள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாகவும்,பரிசோதனை முடிவுகளில் அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று மாலை ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் ஆவார் என அவரது சகோதரர் திரு. சத்யநாராயணன் கூறிய நிலையில் அவரை டிஸ்சார்ஜ் செய்வது எப்போது என்பது குறித்து இன்று பிற்பகல் முடிவு செய்யப்படும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது

Categories

Tech |