நடிகர் ரஜினியின் மனைவி லதா புதிய கட்சி தொடங்க இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினி தமிழக அரசியலில் 20 வருடமாக இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அதன் பிறகு கடந்த மாதம் தான் புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். ஆனால் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தன் புதிய கட்சி தொடங்க போவதில்லை என்று கூறினார். அதனால் அவரின் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த வேதனை அடைந்தனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினி அரசியலில் இருந்து பின்வாங்கியதால், தற்போது அவரின் மனைவி லதா ரஜினி புதிய கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர்களது மகள் சவுந்தர்யா காஞ்சிபுரம் கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜுன மூர்த்தி புதிய கட்சி தொடங்கப் போவதாக நேற்று அறிவித்த நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.