அண்ணாத்த படத்தின் சென்சார் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
#AnnaattheCensoredUA
Indha Deepavali summa saravedi dhan 🔥#AnnaattheDeepavali @rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @prakashraaj @IamJagguBhai @khushsundar @sooriofficial @actorsathish @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #Annaatthe pic.twitter.com/GBSXryndpH— Sun Pictures (@sunpictures) October 16, 2021
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அண்ணாத்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளிக்கு அண்ணாத்த படம் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது.