Categories
சினிமா

நடிகர் ரஜினியை பார்க்க சென்ற மாதவன்…. எதற்காக தெரியுமா?…. வெளியான வைரல் வீடியோ….!!!!

பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட். இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமின்றி அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இந்த படத்தை ட்ரைகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், 27 இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனங்கள் தயாரித்து உள்ளது.

இந்த படம் ஜூலை 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என்று பலரும் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் இப்படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் மாதவன், விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் ரஜினியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அத்துடன் இந்த வீடியோவை தன் சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Categories

Tech |