நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள ‘ருத்ரன்’ பட தயாரிப்பாளரே அந்த படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நடன இயக்குனரும் , நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகங்களும் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து காஞ்சனா முதல் பாகத்தை ஹிந்தியில் ‘லட்சுமிபாம்’ என்ற டைட்டிலில் ராகவா லாரன்ஸ் ரீமேக் செய்தார் . பிரபல நடிகர் அக்ஷய்குமார் ,கியாரா அத்வானி ஆகியோர் நடப்பில் தயாரான இந்த திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அடுத்ததாக நடிக்கவுள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.
‘ருத்ரன்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது . ஆனால் இந்தப் படத்தின் இயக்குனர் பெயரை படக்குழு அறிவிக்கவில்லை. இந்நிலையில் இந்த படத்தை தயாரிக்கும் பைவ் ஸ்டார் கதிரேசனே இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் வெளியான பொல்லாதவன் , ஆடுகளம் , ஜிகிர்தண்டா ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டடித்தவை . இதையடுத்து இவர் மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையையும் வாங்கியுள்ளார்.