நடிகர் ரியோ நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் ரியோ. இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதையடுத்து இவர் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் கதாநாயகனாக நடித்து அசத்தி இருந்தார். இதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரியோ மூன்றாவது இடத்தை பிடித்தார்.
Get ready for fun ride🚗 #PlanPanniPannanum – April 30th theater release.@positiveprint_ @rio_raj @nambessan_ramya@dirbadri @thisisysr @SinthanL@Rajeshnvc5Kumar @DopRajasekarB
@imroboshankar @Bala_actor pic.twitter.com/sVXze71Y1o— Done Channel (@DoneChannel1) April 15, 2021
தற்போது இவர் நடிப்பில் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் பிளான் பண்ணி பண்ணனும் படம் தயாராகியுள்ளது. இந்த படத்தில் ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பிளான் பண்ணி பண்ணனும் படம் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.