Categories
தேசிய செய்திகள்

நடிகர் வழங்கிய டிராக்டர்…! உண்மையில் விவசாயி ஏழையா ? – பரபரப்பு தகவல்

ஆந்திர மாநிலத்தில் நடிகரிடம் டிராக்டர் பெற்ற விவசாயின் குடும்பம் உண்மையிலேயே ஏழையான குடும்பமா என்ற சர்ச்சை எழுந்திருக்கின்றது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளி என்ற பகுதியில் நாகேஸ்வரராவ் என்பவர் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் டீக்கடை நடத்திக் கொண்டிருக்கிறார். அதே சமயத்தில் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்தும் வருகிறார். மகள்கள் இருவரும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கின்றனர். தற்பொழுது கொரோனா ஊரடங்கு காரணமாக டீக்கடை மூடப்பட்ட நிலையில் தனது நிலத்தில் விவசாயம் செய்துள்ளார்.நிலத்தை உழுவதற்கு போதிய பணம் இல்லாத காரணத்தால் மாடுகளுக்கு பதிலாக தனது இரு மகள்களையும் மாடுகள் போல் பயன்படுத்தி நிலத்தை உழுதுள்ளார். அந்த நிலத்தில் வேர்க்கடலை விதையை அவரும் அவரது இரு மகள்கள் மற்றும் மனைவியும் விதைத்தனர். அதனைக் கண்ட கிராம மக்கள் ஆச்சரியமடைந்து கல்லூரி படிக்கும் மகள்களை ஏர் இழுக்க செய்யலாமா? என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் தாய்க்கு சமமாக உள்ள நிலத்தை இவ்வாறு உழுவதில் எத்தகைய தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.

விவசாயி நாகேஸ்வரராவ்வின் இத்தகைய நிலையை உணர்ந்த திரைப்பட நடிகர் சோனுசூட் என்பவர் ஒரு டிராக்டரை அவர்களுக்கு இலவசமாக வழங்கி யுள்ளார். அதனால் அவரது குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இத்தகைய சம்பவம் தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி ஆந்திர அரசு கூறும் போது, நாகேஸ்வரராவ்வின் குடும்பம் வறுமையில் இல்லை என்றும், அவர்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் அனைத்தும் ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளது. நாகேஸ்வரராவ்வின் குழந்தைகள் இத்தகைய செயலை வேடிக்கையாக இது ஊடகங்களில் பதிவிட்டனர்.நாகேஸ்வரராவின் பெற்றோர் அரசாங்கத்தால் கட்டப்பட்டு இருக்கின்ற இந்திரம்மா இல்லத்தில் வசித்து வருகின்றனர். நாகேஸ்வரராவ் குடும்பத்தினர் மதனப்பள்ளியில் வாடகை வீட்டில் இருக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாத காரணத்தால் அவர் குடும்பத்தினர் அவரின் பெற்றோர் வீட்டிற்கு சென்று இருந்தனர். தங்கள் மகள்களின் படிப்பிற்காக அந்த குடும்பமானது அவர்களின் கிராமத்தை விட்டு மதனப்பள்ளி கிராமத்திற்கு வந்து இருக்கின்றனர். அவர் நீண்ட நாட்களுக்கு முன்னரே விவசாயத்தை விட்டுவிட்டு தற்போது டீக்கடை நடத்தி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய சம்பவம் பற்றி சித்தூர் மாவட்ட கலெக்டர் பாரத் குப்தா கூறுகையில், “அந்த குடும்பத்திற்கு இந்த ஆண்டும் சென்ற ஆண்டும் விவசாய முதலீட்டு உதவி திட்டமான “ரிட்டு பந்து” திட்டம் மூலமாக உதவிகள் அனைத்தையும் வழங்கியுள்ளோம். அந்தக் குடும்பத்தினர் டிராக்டர் வைத்து விவசாயம் செய்ய இயலாத அளவிற்கு ஏழைகள் இல்லை. அவர்கள் டிராக்டரை வாடகைக்கு எடுத்துள்ள நிலையில் டிராக்டர் வருவதற்கு முன்னரே இந்த வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது” என கூறியுள்ளார்.

இதனைப்பற்றி நாகேஸ்வர ராவ் கூறுகையில், “ஆம் நான் ஒரு தலித். மனித உரிமைக்கான பணியாளர். லோக் சத்தா கட்சியின் சார்பாக சென்ற 2009 ஆம் ஆண்டு தேர்தலில் நான் போட்டியிட்டுள்ளேன். அதனால் எனக்கு ஆயிரத்திற்கும் மேலான வாக்குகள் கிடைத்தன. சென்ற ஆண்டு விவசாய முதலீட்டு உதவி திட்டம் மூலமாக நாங்கள் பணம் பெற்றுள்ளோம். ஆனால் எவ்வளவு பணம் என்பது எனக்கு சரியாக தெரியவில்லை. ஏனென்றால் நிலம் எனது தந்தைக்கு உரிமையானது. “எனது மகள்களிடம் விவசாயத்திற்கு போதிய பணம் இல்லை, அதனால் விவசாயம் செய்ய வேண்டாம் என்று நான் கூறினேன். ஆனாலும் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளாமல் விவசாயம் செய்வதற்கு என்னை கட்டாயப் படுத்தினார்கள்.”நான் எனக்கு விவசாயம் தெரியாது எனக்கு உதவி செய்யுங்கள் என்று எவரிடமும் கேட்கவில்லை..எனக்கு அரசு உதவி செய்யவில்லை என்று நான் கூறினேனா? என்ற கேள்வியை முன் வைத்துள்ளார்.

Categories

Tech |