Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விக்ரமின் ‘கோப்ரா ‘… அசத்தலான செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்… இணையத்தில் வைரல்…!!!

நடிகர் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள ‘கோப்ரா’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. 8 வித்தியாசமான தோற்றங்களில் விக்ரம் இருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் விருந்தாக ‘கோப்ரா’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் விக்ரமின் உடலில் ஒரு பகுதி எண்கள் போலவும் மற்றொரு பகுதி மனித உடல் போலவும் இருக்கும்  அசத்தலான ஸ்டில் வெளியாகியுள்ளது . இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

Categories

Tech |