Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விக்ரமின் ‘கோப்ரா’… வெளியான ஷூட்டிங் அப்டேட்…!!!

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது மஹான், கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கோப்ரா படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

Happy Birthday Cobra Star Chiyaan Vikram, Must Watch Top 5 Movies of the  Tamil Actor - See Latest

லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் விக்ரம் படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் ரஷ்யாவில் நடைபெற உள்ளது. 15 நாட்கள் நடக்கும் இந்த படப்பிடிப்பில் விக்ரம்- இர்பான் பதானுக்கான காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |