Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விக்ரம் உடல்நிலை…… சற்றுமுன் வெளியான முக்கிய தகவல்….!!!!

நடிகர் விக்ரமுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இவருக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மகான். இந்த படத்தில் விக்ரமும் அவரது மகன் துருவ் விக்ரமும் நடித்திருப்பார். இதைத்தொடர்ந்து அவர் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற படத்தில் நடித்த முடித்துள்ளார்/ இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகின்றது.

இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்புக்கு பின்னர் இரண்டு நாட்கள் கழித்து விக்ரம் வீடு திரும்பவார் என்று கூறப்படுகிறது. இதனால் இன்று மாலை நடைபெறும் பொன்னியின் செல்வன் பட டீசர் வெளியீட்டு விழாவில் இவர் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |