திரைப்பட நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பந்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரைப்பட நடிகர் விக்ரம் திருவான்மியூர் பகுதியில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இன்று அவரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக திடீரென மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
நடிகர்கள் அனைவருக்கும் பழக்கம் போல மிரட்டல் விடும் மாரகாணத்தை சேர்ந்த நபரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தற்போது விக்ரம் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.