தமிழ் திரையுலகில் நடிகர் இன்று, இந்த அளவிற்கு வளர்த்துள்ளார் என்றால், அதற்கு அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு முக்கிய காரணம் ஆகும். இந்நிலையில் விஜய் தனது 18 வயதில் சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் இருக்கின்றது என்று சொன்னவுடன், முதலில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.
இதையடுத்து நடிப்பின் மேல் நடிகர் விஜய்க்கு இருக்கும் ஆர்வத்தை பார்த்து, அவரை ஹீரோவாக்கினார். இந்நிலையில் விஜய்க்கு ‘பூவே உனக்காக’ என்ற திரைப்படம் முதல் வெற்றிப்படமாக இருந்தாலும், சினிமாவில் அவரை ஒரு ஹீரோவாக நிலைநிறுத்தியது சந்திரசேகர் தான்.
மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்யை வைத்து தொடர்ச்சியாக 5 படங்களுக்கு மேல் இயக்கி, அதன் பிறகு, ரசிகர்களின் நெஞ்சில் விஜய் மளமளவென வளர்ந்து இன்று தளபதியாக குடியிருக்கிறார். இந்நிலையில் அண்மை காலமாக விஜய்க்கும் அவரது தந்தைக்கும் பிரச்சனை இருந்து வருவது அனைவர்க்கும் தெரிந்ததே எனவும் மேலும் அதை சந்திரசேகரே வெளிப்படையாகவே கூறியிருக்கின்றார்.
இதைத்தொடர்ந்து ஒரு யூடியுப் சேனலை தொடங்கிய எஸ்.ஏ.சந்திரசேகர் ,அதில் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார். தற்போது ரசிகர்கள் மத்தியில் அவர் பதிவிடும் வீடியோக்கள், அமோக வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் அண்மையில் விஜய்யை பற்றி, அவரது தந்தை பேசியது வைரலாக பரவி வருகின்றது. அதில் அவர் கூறியுள்ளதாவது, விஜய் எங்களை மாதம் ஒரு முறை வந்து பார்த்தாலே போதும் என்றும் மேலும் ஒரு அரை மணி நேரம் பேசினாலே எங்களுக்கு சந்தோசம். ஆகவே இதைமட்டும் விஜய் செய்தாலே போதும் என கண்கலங்கி, எஸ்.ஏ.சந்திரசேகர் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.