தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஜய் கடந்த 2016-17 ஆம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்த போது அந்த வருடத்திற்கான வருமானம் 35 கோடியே 42 லட்சத்தை 91 ஆயிரத்து 890 ரூபாய் என குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீடு தொகையை வருமானவரித்துறை நடிகர் விஜய் வீட்டில் 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணத்துடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது புலி படத்திற்காக பெற்ற 15 கோடி ரூபாயை கணக்கில் காட்டாதது தெரிய வந்தது.
இதன் காரணமாக வருமானவரித்துறையினர் கடந்த ஜூன் மாதம் நடிகர் விஜய்க்கு 1 1/2 ரூபாய் அபராத விதித்தனர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அபராதம் விதித்திருந்தால் கடந்த 2019-ம் ஆண்டு அபராதம் விதித்திருக்க வேண்டும். காலதாமதமாக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வருமான வரித்துறையினர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு, அக்டோபர் 26-ம் தேதி வரை இடைக்கால தடையை நீடித்துள்ளனர்