Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய்யின் ‘தளபதி 65’… படப்பிடிப்பு எப்போது?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் விஜய்யின் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படம்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Vijay to romance two heroines in 'Thalapathy 65'? - Tamil News -  IndiaGlitz.com

மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்த பிறகு தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |