Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’… ஷூட்டிங் குறித்த சூப்பர் அப்டேட்…!!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் தொடங்கப்படவுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்யின் 65-வது திரைப்படம் பீஸ்ட். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது.

Vijay's 'Thalapathy 65' is titled 'Beast', first look poster revealed | The  News Minute

இதைத்தொடர்ந்து சென்னையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதில் விஜய், பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதாக  கூறப்பட்டது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |