Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம்…. தியேட்டரில் திரை கிழிப்பு…. பெரும் பரபரப்பு….!!

பிரபல நடிகர் விஜய் நடித்த  பீஸ்ட் படம் ரிலீஸான தியேட்டரில் திரை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் நேற்று வெளியானது. இந்த திரைப்படம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் 3 திரையரங்குகளில் ரிலீஸானது. நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை பார்ப்பதற்காக தியேட்டரில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக 3 தியேட்டர்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகமாக கைத்தட்டி, விசிலடித்து, நடனமாடினார்.

இந்நிலையில் சில ரசிகர்கள் படம் ஓடிக்கொண்டிருந்த  திரையின் முன்பாக நின்று நடனம் ஆடினர். இவர்களை காவல்துறையினர் இருக்கையில் அமர்ந்து படத்தை பார்க்குமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து ரசிகர்கள் அவசர அவசரமாக இருக்கைக்கு சென்றபோது திடீரென திரை கிழிந்தது. இதனால் தியேட்டரில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பீஸ்ட் திரைப்படம் தொடர்ந்து திரையிடப்பட்டது.

Categories

Tech |