Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’… ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான அறிவிப்பு…!!!

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கோடியில் ஒருவன். இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை நடிகர் விஜய் ஆண்டனி செய்துள்ளார் .

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மே 14-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் கோடியில் ஒருவன் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

 

Categories

Tech |