இசையமைப்பாளர் “விஜய் ஆண்டனி” நடிக்கும் “ரத்தம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தது குஷியில் ரசிகர்கள்.
தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனி மழை பிடிக்காத மனிதன், கொலை மற்றும் வள்ளி மயில் போன்ற படங்களில் நடித்து வருகின்றார். இதில் சில திரைப்படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இதற்கிடையே இவர் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் “ரத்தம்” திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன் மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடிக்கின்றார்கள். இன்பினிடி பிலிம் வென்டர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பி.பிரதீப், பங்கஜ் போரா & எஸ்.விக்ரம் குமார் ஆகியோர் இந்தப் திரைப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
மேலும் “ரத்தம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வந்துள்ளது. இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் சி.எஸ்.அமுதன் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது, “நாங்கள் படப்பிடிப்பை முடித்து விட்டு இந்தியா திரும்பிவிட்டோம். போஸ்ட் புரொடக்ஷனின் பெரும் பகுதி முடிவடைந்தது. இந்நிலையில், உங்களை திரையரங்குகளில் பார்க்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. இதனை தயக்கமின்றி ஆபத்தான ஸ்டண்டுகளை செய்த படக்குழுவினருக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.