Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’… முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இயக்குனர் சீனுராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார் . மேலும் இந்தப் படத்தில் பேபி மானஸ்வி, அனிகா, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .

இந்த படத்திற்கு இளையராஜாவுடன் இணைந்து யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . கடந்த 2019ஆம் ஆண்டு மாமனிதன் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. ஆனால் இன்னும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ‘மாமனிதன்’ படத்தின் முதல் பாடல் ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |