Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’… இளையராஜா பாடிய ‘தட்டிப்புட்டா’ பாடல் ரிலீஸ்…!!!

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இயக்குனர் சீனுராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் பேபி மானஸ்வி, அனிகா, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘தட்டிப்புட்டா தட்டிப்புட்டா’ பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பா. விஜய் எழுதியுள்ள இந்த பாடலை இளையராஜா பாடியுள்ளார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி யாதும் ஊரே யாவரும் கேளிர் கடைசி விவசாயி காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல திரைப் படங்களை கைவசம் வைத்துள்ளார் .

Categories

Tech |