Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் சேதுபதியின் ‘முகிழ்’… ரசிகர்களை கவரும் அழகான டீசர்..!!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள முகிழ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான அனபெல் சேதுபதி, லாபம், துக்ளக் தர்பார் ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. தற்போது இவர் விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், VJS 46, மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கான மும்பைகார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி தனது மகள் ஸ்ரீஜாவுடன் இணைந்து முகிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். எஸ்.கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெஜினா கெஸன்ட்ரா கதாநாயகியாக நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் மற்றும் பாக்கெட் மணி பிலிம்ஸ் புரொடக்சன் இணைந்து வழங்கும் இந்த படத்திற்கு ரெவா இசையமைத்துள்ளார். சத்யா பொன்மார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு பாலாஜி தரணிதரன் பாடல்கள் எழுதியுள்ளார். இந்த படத்தின் நீளம் 62 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் வருகிற அக்டோபர் 8-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் முகிழ் படத்தின் அழகான டீஸர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Categories

Tech |