நடிகர் விஜய் சேதுபதியுடன் சீரியல் நடிகை அஷா கௌடா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் லாபம், மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட பல திரைப்படங்கள் தயாராகியுள்ளது.
மேலும் இவர் ஹிந்தியில் மும்பைகார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி பிரபல சீரியல் நடிகை அஷா கௌடாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கோகுலத்தில் சீதை சீரியலில் நடிகை அஷா கௌடா கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.