கடந்த ஆண்டு மகா காந்தி என்பவர் நடிகர் விஜய் சேதுபதி தன்னை பெங்களூர் விமான நிலையத்தில் தாக்கியதாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தால் அதில் நான் கடந்த நவம்பர் 2 ம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் சென்ற போது எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் சேதுபதியை பெங்களூர் விமான நிலையத்தில் பார்த்தேன். அப்போது அவரை பாராட்டி கைகுலுக்கிய போது அவர் அதனை ஏற்க மறுத்து பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்ததாகவும், தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் விஜய் சேதுபதியின் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் இந்த விவகாரம் பற்றி நேரில் ஆஜராகும் படி நடிகர் விஜய் சேதுபதிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் விஜய் சேதுபதி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் இந்த வழக்கை விசாரித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து செய்ய உத்தரவிட்டனர்.