லைகர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் லைகர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இந்நிலையில் மைக் டைசன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய இடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ஆகஸ்ட் 6-ம் தேதி காலை 9 மணி அளவில் லைகர் படத்தின் பாடல் வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றினை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
#AAFAT,
Song Tomorrow at 9 AM ♥️#LIGER@TheDeverakonda @ananyapandayy @karanjohar #PuriJagannadh @tanishkbagchi @DharmaMovies @PuriConnects @sonymusicindia @SonyMusicSouth pic.twitter.com/1ZX4PcLDAU— Puri Connects (@PuriConnects) August 5, 2022