நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார். இந்த செயல் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.
தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் காலையிலேயே தங்களது வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். நடிகர் அஜித், சூர்யா, ரஜினி, கமல் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் வந்து தங்களது வாக்கு பதிவினை செலுத்தி தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். இதனிடையே நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார்.
#ThalapathyVijay Thought Provoking Act for #PetrolDieselPriceHike
It's an Statement 💥!#TamilNaduElections2021 #TNElections2021 pic.twitter.com/elmKMVTZQe
— Avanthika (@Avanthika_1497) April 6, 2021
Actor #Vijay cycling to the polling booth to cast his vote in the #TamilNaduElections Is he highlighting the failure of #BJP and #AIADMK over the #PetrolDieselPriceHike? pic.twitter.com/vAVqZOjgFY
— G Jagannath (@Jagan_G1983) April 6, 2021
அவரது இந்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டிக்கும் விதமாக நடிகர் விஜய் வாக்களித்துள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ட்விட்டரில் #PetrolDieselPriceHike என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இது ஆளும் மத்திய மாநில கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் ஆளும் அரசாங்கங்கள். விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்த செயல் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.