விஜய் மக்கள் இயக்கம் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து வருவதாக விஜயின் தந்தை பரபரப்புப் புகார் அளித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் விஜய் மக்கள் இயக்கம் திரைப்படங்களின் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் திரைப்படங்களின் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பதாக விஜயின் தந்தை சந்திரசேகர் புகார் அளித்துள்ளார்.
மேலும் 100 ரூபாய் டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்க்கு விற்று ஒரு வருடத்திற்கு தேவையான பணத்தை சில சம்பாதிப்பதாகவும், விஜய் மக்கள் இயக்கமும் மக்களுக்கு சேவை செய்யாமல் வியாபாரம் செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். விஜயின் தந்தை இவ்வாறு புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.