பிரபல இயக்குனர் ஒருவர் விஜய் மக்கள் இயக்கம் குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தன்னுடைய பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார்.
இந்த பிறந்தநாள் விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்ளாதது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்கம் குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது விஜய் மக்கள் இயக்கம் வலுவிழந்து விட்டதாகவும், விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக நடிகர் விஜய்யிடம் தான் பலமுறை பேசி விட்டதாகவும் எஸ்.ஏ சந்திரசேகர் கூறியுள்ளார்.